நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
Monday, July 18th, 2022
தனியார் பேருந்துகளுக்கு நாளாந்தம் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுமானால், விலைகுறைப்புக்கு ஏற்ற பயனை பயணிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ ஊடாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.
எனினும், அந்த எரிபொருள் போதுமானதாக இல்லை என இலங்கை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது
மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ரத்து!
இரட்டைப் பிரஜாவுரிமையுடைய எம்.பி.க்கள் யார் என்பதை தெரிவிக்குமாறு கோரிக்கை!
|
|
|


