எதிர்வரும் 20ம் திகதி அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை !
Tuesday, May 16th, 2017
அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) – 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அனைத்;து பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைக்கான அனுமதிஅட்டை தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் கீழ்க்கண்ட பரீட்சை திணைக்களத்தின் பிரிவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்முடியும். தொலைபேசி இலக்கம் 011 2785230 / 011 2177075 / 1911 என்ன அவசர தொலைபேசியினூடாக 24 மணித்தியால சேவையினூடாகவும் விபரங்களை அறிந்துகொள்ளமுடியும்.
Related posts:
சாதாரண பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!
இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்குகிறது விவசாய அமைச்சு!
மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு - விசேட வர்த்தமானியும் வெளியானது!
|
|
|


