நாயின் கடித்து சிறுவன் பரிதாபச் சாவு!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் வெறி நாயொன்றின் கடிக்கு இலக்கான சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நீர்வெறுப்பு நோய்க்கு ஆளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளான். மேலும் சிறுவனின் தாய்மற்றும் சகோதரி ஆகியோரும் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று நாய் ஒன்று வீட்டினுள் நுழைந்ததாகவும் அப்போது வீட்டினில் இருந்த குறித்த சிறுவன் உட்பட தாய் மற்றும் சகோதரி ஆகிய மூவரையும்வெறித்தனமாகக் கடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே நீர்வெறுப்பு நோய்க்கு ஆளாகிய நிலையில் மேற்படி சிறுவன் பலியாகியுள்ளார்.
இதேவேளை குறித்த நாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் தற்பொழுது அதிகாரிகள் இறங்கியுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|