நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது!

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று இரவு 11.55 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் இதில் தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இந்த விமானம் இன்று காலை 7.05 மணியளவில் தாய்லாந்து திரும்பியதாகவும், தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெறுவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விமானத்தையும் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க விமான நிலையத்திற்கு வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இளம் விவசாய உற்பத்தியாளர்களுக்கு 6.5 வட்டியில் கடன்!
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் - வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் 4 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்க ஊர்...
|
|