நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா பயணம்!

Friday, June 28th, 2024

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரிலே முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர், சீன பிரதமர் லீ கியாங்(Li Qiang) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருடன் அங்கு தங்கியிருக்கும் போது கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன்  இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும்  இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நினைவு நிகழ்வுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொழும்பு செல்லும் பார ஊர்திகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பி.சி.ஆர் பரிசோதனை - மாவ...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு - நீ...
எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை - அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!