நான்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
Wednesday, January 25th, 2017
இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் மற்றும் மொங்கோலியா, லிதுவேனியா, பனாமா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நியமனம் தொடர்பான சான்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
மொங்கோலியா நாட்டின் தூதுவர் கொன்சிக் கேன்ங்போல்ட், லிதுவேனியா தூதுவர் லைமொனாஸ் தலத் கெல்ப்ஸோ, பனாமா தூதுவர் சொர்வியோ சௌல் சனுடியோ பெதன்கோர்ட் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இதனை கையளித்துள்ளனர்.




Related posts:
மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
சுயாதீன விசாரணைக்கு பிரதமர் இணக்கம்!
யாழ் மாவட்டத்தில் பகுதியளவில் கடையடைப்பு – செய்வதறியாது தடுமாறிய மக்கள்!!
|
|
|


