சுயாதீன விசாரணைக்கு பிரதமர் இணக்கம்!

Sunday, September 8th, 2019


ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடரட்பில் விசாரிப்பதற்கென சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு மறைமாவட்ட ஆயர் முன்வைக்கும் கோரிக்கையுடன் தாமும் உடன்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிவதற்காக சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த கோரிக்கைக்கு தாமும் இணங்குகின்றேன்.

குண்டுத் தாக்குதல் பற்றி ஆராய்வதற்கென ஜனாதிபதி விசாரணைக்குழுவும், நாடாளுமன்ற தெரிவுக் குழுவும் செயல்பட்டு வருகின்றன. அவை சமர்ப்பித்துள்ள அறிக்கைகளுக்கு அமைய, ஏனைய தகவல்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றுக்கு கிடைக்குமென பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பனவற்றின் அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படவிருக்கின்றன. இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் சில மாதங்களில் மேலதிக விசாரணைகளின் மூலம் உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

000

Related posts: