நான்கு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!
Tuesday, April 18th, 2023
மின்சார விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் E.M.S.P.ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் பொதுவாழ்க்கையை பேணுவதற்கு உரிய நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள் இன்றியமையாதவை என்பதால் அந்த சேவைகளில் தடையோ அல்லது இடையூறுகளோ ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
4600 படை வீரர்கள் பணி நீக்கம்!
கொரோனா தொற்றின் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அ...
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை வெற்றியளித்துள்ளது – சுற்றுலாத்துறை மகிழ்ச்சி தெரிவிப்பு!
|
|
|


