நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024

கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் செயற்பட்டவை என்றும், அவற்றின் பௌதீக வளங்களை வேறு பயனுள்ள தேவைகளுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறான ஒரு சில பாடசாலைகள் வேறு கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: