தமிழ் மக்களின் கலாசாரத்தின் முகவரியாகத் திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா – அருட்திரு ராஜ்குமார் புகழாரம்!

Sunday, September 11th, 2016

ஒரு இனத்தின் கலையை வளர்த்தெடுப்பதில் முன்நின்று உழைப்பவர்கள் கலைஞர்களே என்றும் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு கலைகளின் பங்களிப்பும் அவசியமாக அமைந்துள்ளதென்றும் அருட்திரு ராஜ்குமார் அடிகளார் தெரிவித்துள்ளார்.

உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயத்தில் குபேரகா கலைக் கழகத்தால் நடாத்தப்பட்ட கலை விழாவிற்கு ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

உலகில் இலக்கியங்கள் அந்தந்த நாடுகளின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைய பிரதிபலிக்கின்றன. பல நாடுகளில் கிராமங்களிலேயே கலைப் பாரம்பரியங்கள் அதிகமாக வளர்ச்சிகண்டு வருகின்றன.

DSCF1749 (1)

இலக்கியங்களும் கலைகளும் தோற்றம் பெற்ற வரலாறுகள் தொன்மையானது. அந்த வகையில் தான் காலங்கள் இலக்கியத்தால் சிறப்பு பெறுகிறது. தமிழ் மக்களின் கலைப் பாரம்பரியங்கள் மிகவும் தொன்மையானவை என்பதுடன் இவை ஏனைய மக்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்கின்றது என்பது ஜதார்த்த பூர்வமானது.

இந்நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்களின் கலை இலக்கியங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிலும் மந்த வளர்ச்சி காணப்படுகின்றமையானது மிகுந்த வேதனையைத் தருகின்றது.  அந்தவகையில் தமது பண்பாடு கலை இலக்கிய வளர்ச்சிக்கு இவ்வாறான கலை நிகழ்வுகள் மென்மேலும் உந்துதலாக அமையும் என்பதே அசைக்க முடியாத உண்மை ஆகும்.

14

எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் காப்பதிலும் அவற்றை வளர்த்தெடுப்பதிலும் அமைச்சராக மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துகொண்டு மிக நீண்டகாலமாக அயராது கடும் பிரயத்தனத்துடன் தொடர்ச்சியாக உழைத்து வருபவரும் அதனை ஊக்குவித்து வருபவருமாக விளங்கும் அதேவேளை எமது கலாசாரத்தின் முகவரியாகவும் திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும் அருட்திரு ராஜ்குமார் அடிகளார் சுட்டிக்காட்டினார்.

8

Related posts:


சமூக சீரழிவுகளை தடுத்து நிறுத்த துரித கதியில் நடவடிக்கை வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி ந...
திட்டமிட்டபடி பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - அமைச்சர் பந்துல குணவர்தன!
வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...