நான்காயிரம் அரச பேருந்துகள் சேவையில் – தடுப்பூசி ஏற்றாதவர்கள் பயணிக்க அனுமதியில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!
Tuesday, August 10th, 2021
ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் நான்காயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்னசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தனியார் பேருந்துகளும் ஆசனங்களின் எண்ணிக்கையில் 50 சதவீதமான ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி ஏற்றாதவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். பேருந்துகளில் ஏறுபவர்களின் தேசிய அடையாள அட்டையை பரிசோதிக்கும் நடவடிக்கை நேற்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸாரினால் இளைஞன் சுட்டுக்கொலை! ?
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை!
பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு இந்தியாவின் பிரதிநிதி இலங்கை வருகை!
|
|
|


