நாட்டை நீண்ட காலத்திற்கு முடக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Sunday, August 29th, 2021

நாட்டை நீண்ட காலத்திற்கு முடக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நீண்டகால பொருளாதார பாதிப்புகள் பரந்துபட்டவையாக காணப்படும் என்பதால் நாட்டை திறந்துவைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 4.5 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மோசமாக பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முடக்கநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை காணப்படும், எனவும் டுவிட்டரில் தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் ஆனால் நாட்டை திறந்துவைத்திருக்க வேண்டும் அது இயங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: