நாட்டை கட்டியெழுப்ப அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி தேவை – ஜனாதிபதி!

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Related posts:
காலநிலை மாற்றம் – பாடசாலை மாணவர்களுக்கு எச்சரிக்கை!
மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!
|
|