பாடசாலை சூழலே சிறுவர்களுக்கு உகந்தது – கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்து!

Thursday, October 28th, 2021

கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களிடம் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா, கேட்டுக்கொண்டார்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர் – கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்..

குறிப்பாக ரிட்ஜ்வே மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை இறுதி நிலவரப்படி 10 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், நேர்மறை வழக்குகள் அதிகரிக்கக்கூடும் என்றும் டெல்டா மாறுபாடும் சமூகத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என்றும் அவர்களை தனிப்பட்ட சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் வைத்தியர் பெரேரா கேட்டுக்கொண்டார்.

எனவே கடந்த 6 மாதங்களாக பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத நிலையில் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துமாறும் பெற்றோர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளதுடன். மேலும் பாடசாலைச் சூழல் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிழப்பிடத்தக்கத்.

000

Related posts: