நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி!

கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு மருந்துக்கு தேசிய ஔடத ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் –
“இந்த ஔடதம் ஏற்கனவே தேசிய மருத்துவத்தால் விஞ்ஞான ரீதியாக உணவு நிரப்பியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, சுய விருப்பத்தின் பேரில் குறித்த ஔடதத்தை பெற்றுக்கொள்வதை தடுக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இயக்கச்சியில் கோர விபத்து - இரு சகோதரிகள் பரிதாபப் பலி!
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் – பிரதமர் மஹிந்த தெ...
கண்டிக்கு முதலிடம் – இரண்டாம் இடம் யாழ்ப்பாணம் - 72.7 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி - ...
|
|