நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் எமது அதிகாரத்தை வெளிப்படுத்துவோம் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகிய காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற வகையில் கட்சி என்ற ரீதியில் ஆதரவு வழங்குகிறோம். ஜனாதிபதிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நல்லிணக்கப்பாடு காணப்படுகிறது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில் –
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், அவருக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை. .
இதேநேரம் நாட்டு நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
மறுபுறம் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அப்போது எமது அதிகாரத்தை வெளிப்படுத்துவோம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|