நாட்டில் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகட்டத்தில் : எச்சரிக்கிறது சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்

Tuesday, June 12th, 2018

நாட்டில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையிலுள்ள தரவுகளின்படி உலகில் 152 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவர்களின் இளமைக் கல்வி முற்றாக மறுக்கப்படுவதோடு அவர்களின் நீண்டகால உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related posts: