நாட்டில் வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டம் ஒன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் முறையற்ற விதத்தில் செயற்படும் சாரதிகளைக் கைது செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்காக 9 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேற்றுமுன்தினம்முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த விசேட கண்காணிப்பு நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை மின்சாரசபை முகாமைத்துவத்தை எச்சரித்தார் பிரதமர்!
ஓரிரு நாளில் மரக்கறிகளின் விலைகள் குறையும்!
இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் ஆணையத்திற்கு இல்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவ...
|
|