நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு!
Monday, December 17th, 2018
அடுத்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற அரசியல் காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான நிதி ஒதுக்கங்கள் செய்யப்படாதமை காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் அனுமதிப் பத்திரங்கள் விடுவிக்கப்பட்டு அதற்கான செயன்முறைகள் பின்பற்றப்பட்டதின் பின்னரே இலங்கைக்கான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடன் அனுமதிப் பத்திரங்களை விடுவிப்பதற்கு போதுமான நிதி இல்லாமையே மருந்து விநியோகம் தாமதமாவதற்கு காரணம் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்னவை நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
Related posts:
|
|
|


