நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!
Wednesday, September 28th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (27) மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்போது, ஊடங்களுக்கு கருத்துவெளியிட்ட மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் மதுபானத்தின் பாவனை வீதம் குறைவடைந்துள்ளதாக மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாகவே 20 முதல் 37 வீதம் வரை மதுபானத்தின் பாவனை குறைவடைந்துள்ளது.
அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபான விற்பனையில் 22 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


