நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் விசனம்!

Friday, December 15th, 2023

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள சந்தைகளில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில இடங்களில்  ஆயிரத்தையும் தாண்டிய விலையிலும் விற்பனை செய்யப்டுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை, கத்தரி, போஞ்சி, கரட், லீக்ஸ் மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே நாட்டில் தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வருவது தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம். அத்தபத்து,

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அடுத்த வாரத்திற்குள் நாட்டுக்கு தேவையான அளவு வெங்காயம் கிடைத்துவிடும் என்பதால் வெங்காயத்தின் விலை குறைவடையும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால் தகவல்களை வெளிப்படையாக கூறமுடியாது - ஏப்ரல் 21 தாக்குத...
மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களால் 8 மாதங்களில் 85,...
செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் - 2025 ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் - 2025மார்ச்சில் மாகாண சபை தேர்த...