நாட்டில் குளிரான காலநிலை தொடரும்!
Friday, January 25th, 2019
நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படுமென தெரிவித்துள்ள அந்தத் திணைக்களம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது. சில பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளில் கடும் பனியுடன் கூடிய காலநிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது.
Related posts:
இவ்வருட பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!
வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள அமெரிக்கா உதவும் - தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு!
|
|
|


