நாட்டில் இரண்டு நாள்களில் 49 பேர் கொரோனாவால் பலி!
Wednesday, May 12th, 2021
இலங்கையில் கடந்த இரண்டு நாள்களில் 49 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 23 கொரோனா மரணங்களும், நேற்றுமுன்தினம் 26 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினமே நாட்டில் அதிகளவு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. வத்தேகம பகுதியைச் சேர்ந்த 3 மாத குழந்தை ஒன்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளது. அத்துடன் அன்றையதினம் 14 ஆண்களும், 11 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நேற்று 15 ஆண்களும், 8 பெண்களும் என 23 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை அரசியலமைப்பு பேரவையின் இணையத்தளம் ஆரம்பம்!
ஐநாவின் சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது - வெளிவிவகார செயலர் தெரிவிப்பு!
அடுத்த கட்ட பேச்சின் போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முதலில் ...
|
|
|


