நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் கடும் எச்சரிக்கை!
Friday, August 6th, 2021
நாடு முழுவதிலும் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் நேற்றுமுன்தினம் மட்டும் 94 பேர் மரணமடைந்தனரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் தொகை 4 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஐ.டி.எச்., இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் இராகமை ஆகிய 4 வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஒட்சிசனுக்குப் பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா மரணங்களின் தொகையும் தீவிரமாக அதிகரித்து வருவதையிட்டு சுகாதாரப் பகுதியினர் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம் நேற்றுமுன்தினம் மரணமடைந்த 94 பேரில் 49 பேர் ஆண்கள் எனவும், 45 பேர் பெண்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதில் 73 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 19 பேர் 30 வயதுமுதல் 59 வயது வரையிலானவர்கள் என்றும் இருவர் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களில் மரணமடைந்தவர்களின் தொகை சடுதியாக அதிகரித்துவருவரும நிலையில் திங்கட்கிழமை 74 பேரும் செவ்வாய்கிழமை 82 பேரும் புதன்கிழமை 94 பேரும் மரணமடைந்தனர்’ என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால், கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் தொகை 4 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 669 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


