நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் அனைத்திற்கும் CCTV கெமராக்கள்!
Monday, September 19th, 2016
நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே முதன்முதல் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என்றும்,இதற்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் பல்கலைக்கழகங்களின் ஊடாக பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அடுத்த வருடம் இந்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் பொருத்தும் நடவடிக்கை சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:
மூதூர் - தொண்டமானாறு பேருந்து சேவை திங்கள் முதல்!
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் - உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு !
|
|
|


