வடக்கில் அருகிச் செல்லும் மட்பாண்ட உற்பத்தி!

Thursday, May 10th, 2018

தொழிலுக்கான மண் கிடைக்காமையால் தொழில் செய்யும் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வடக்கில் மட்பாண்ட உற்பத்தி அருகி வருவதற்கு மண் இல்லாமையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மட்பாண்டத் தொழிலை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கொடிகாமம், மட்டுவில் பிரதேச மக்கள் இன்று பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் மண்பானை உற்பத்தியாளர்கள் தெரிவித்ததாவது –

இப்போது மண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு செல்கின்றது. மல்லாவி, கண்டாவளை போன்ற இடங்களில் இருந்துதான் நாங்கள் மண்ணைப் பெற்று வந்தோம்.

தற்போது அதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை. அங்கிருக்கும் மக்கள், மணலை எல்லோருக்கும் கொடுத்தால் தங்களுடைய வளம் இல்லாமல் போகின்றது என்று தெரிவிக்கின்றனர், தர மறுக்கின்றனர்.

குறித்த பிரதேச சபையினரும் மணல் அள்ளுவதற்கான அனுமதி தருவதற்கு இழுத்தடிக்கின்றனர். அரசு, கனியவளத் திணைக்களம் போன்றவற்றின் அனுமதிகள் தேவை என்று ஒவ்வொரு காரணம் கூறுகின்றனர். நாங்கள் பல ரைக்ரர் மணல் கேட்டால் பிரதேச செயலகம் ஒரு ரைக்ரர் மண் தருகின்றது. இருந்தபோதும் கண்டாவளை மண்ணை முற்றுமுழுதாக தடை செய்துள்ளனர்.

போர் முடிந்த பின்பு மணல் அள்ளும் கண்டாவளைக் காணி அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. அந்தக் காணிக்கு சிலர் தங்களுடைய காணி என உரிமை கோரி பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணத்தால் அங்கு மண் ஏற்றுவது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.

போர் முடிவுற்று பாதை திறந்த காலத்தில் இருந்தே மண் பிரச்சினை இருக்கின்றது. எனினும் தற்போது அதிகளவில் காணப்படுகின்றது. மல்லாவியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்ரெம்பர் மாதம் மட்டும் மழை குறைவு காரணத்தால் மண் ஏற்றமுடியும். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதி தருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் மண்ணை ஏற்றுவதற்குப் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.

Related posts: