நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழு நியமனம்!
Tuesday, April 30th, 2019
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு, பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்புக் கருதி அதிபர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஷால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றுமுதல் விடுமுறை!
2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை - உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


