நாட்டின் வளிமண்டலத்தில் தூசுத் துகள்களின் செறிவு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை!
Wednesday, November 30th, 2022
இலங்கையின் வளிமண்டலத்தில் உள்ள தூசுத் துகள்களின் செறிவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிக அளவை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அந்த நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு நவம்பர்முதல் எதிர்வரும் மார்ச் வரை இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து, நாட்டின் வளிமண்டலத்தை பாதிக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கலாசார விழுமியங்களை அழியாது காக்கவேண்டும் - யாழ்.மாவட்ட செயலாளர்!
கொரோனா நோய் அறிகுறி - வைத்தியசாலையில் பிரித்தானிய பிரதமர்!
சதொசவுக்குரிய வெள்ளைப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை: வர்த்தக அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 4 அதிகா...
|
|
|


