நாட்டின் புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் கருத்துக் கணிப்பின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
Tuesday, May 24th, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்துக் கணிப்பு அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டின் பிரதான நகரங்களில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு, மக்களும் தமது பூரண பங்களிப்பினை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஒவ்வொரு பிரதேச மக்களும் பலவிதமான அபிப்பிராயங்களை குறித்த கருத்துக் கணிப்பில் பதிவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மக்களின் கருத்துக் கணிப்பானது மூன்று மொழிகளிலும் இணையத்தளத்தில் பதிவேற்றப்படவுள்ளதாக மக்கள் கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழுவின் தலைவரான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அறிக்கையானது எதிர்வரும் 27ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவருக்கு விளக்க மறியல்
ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகை
ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி - இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலி...
|
|
|


