நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் முப்படையும் தயார்!

Friday, September 30th, 2016

யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலங்கை இராணுவத்தின் முப்படை, தமது கடமையை சரியாக தொடர்ந்தும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்த விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி, இலங்கை பாதுகாப்பு விடயத்தில் அவதானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கண்டிக்கு, நேற்று (29) விஜயம் மேற்கொண்டிருந்த, விமானப் படைத்தளபதி ஸ்ரீ தலதா மாளிகை, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடத்துக்கு விஜயமேற்கொண்டதுடன், மஹா நாயக்க தேரர்களிடம் நல்லாசி பெற்றுகொண்டார்.

இதன்பின்பு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘உலகிலுள்ள பல நாடுகளில் யுத்தம் இல்லாதபோதிலும், அங்கு பாதுகாப்பு விடயங்கள் மிகத் துள்ளியமாக உள்ளது. இலங்கையும் அவ்வாறே பாதுகாப்பு விடயத்தில் மிக விழிப்பாக இருந்து வருகின்றது’ என்றார்.

‘பொதுமக்களின் உயிருடமை, பொதுச் சொத்து, தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் தமது கடமையையைச் செய்வதில் பாதுகாப்புத் தரப்பினர் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அது தமது தலையாய கடமை’ என்றும் தெரிவித்தார்.

‘விமானப்படை அதிகாரிகளது குடும்ப நலன்கள் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகளது சேம நலன்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

air_vice_marshal_jayampathy_12092016_kaa_cmy

Related posts: