நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று அதிகரித்து வீசக்கூடும்.
எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
கொரோனா வைரஸ்: ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !
யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி - வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசே...
|
|