நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே ஜனாதிபதி (08) இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் வகையில் பிழையான தீர்மானங்களை எடுத்தவர்கள் குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கும் ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அசாதாரண வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சகல அரச நிறுவனங்களை ஒரே வலையமைப்பில் - ஜனாதிபதி அவதானம்!
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!
|
|