நாட்டின் சட்ட அமைப்பு பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023

நாட்டின் சட்ட அமைப்பு பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சாதாரண தர மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 7-8 வருடங்களாக, நாட்டின் அடிப்படை சட்ட அமைப்பு பற்றிய அறிவை சாதாரண தர மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகின்றோம். இதனை 2023ல் செயல்படுத்த நாம் எதிர்ப்பார்த்திருந்தோம்.

இந்த ஆண்டு செயல்படுத்தப்படுமா என்று எனக்கு தெரியாது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு முன்மொழிவுகளில் சேர்க்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் தனக்கான உரிமைகள் என்ன என்பது பற்றிய தெரிந்திருக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள பலருக்கு தங்களின் உரிமைகள் என்னவென்று தெரியாது.

அதனால்தான் சில நேரங்களில் அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகளை நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் பல புதிய சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: