நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
 Saturday, August 8th, 2020
        
                    Saturday, August 8th, 2020
            
கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நாடு சுகாதார ரீதியில் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுத் தேர்தல் சுகாதார முறைகளுக்கு அமைய நாடு முழுவதும் நடைபெற்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர், ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஆகியோர் வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல சுகாதாரத் துறையினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நாடு சுகாதார ரீதியில் பாதுகாப்பாக உள்ளது. இந்த நிலையில் நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        