போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!

Friday, June 24th, 2016

கடந்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் வடமாகாணக் கல்வியமைச்சினால் திரட்டப்பட்டு வருகின்றன.

வடமாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களில் 2009 ஆம் ஆம் ஆண்டுக்கும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் போரினால் உடல் அங்கங்கள் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குண்டுச் சிதைவுகளை உடலினுள் கொண்டுள்ள மாணவர்கள் மற்றும் அவயவங்கள் செயலிழந்த மாணவர்களின் பெயர், வயது மற்றும் பாதிப்பின் தன்மை போன்ற  விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

பாடசாலைகளின் அதிபர்கள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகவே மேற்கண்ட விபரங்கள் திரட்டபடுகின்றன.

Related posts:


மஹிந்த வெல்ல வேண்டும் என விரும்பியவர் பிரபாகரன்: கோட்டபய வெல்ல வேண்டும் என விரும்பியவர் அமைச்சர் டக்...
முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது அவசியம் - நிகழ...
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவ...