நாட்டின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு!

Wednesday, August 8th, 2018

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 12.1 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய சங்க நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதி அதிகரித்தமையே இதற்கு காரணமாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஊடாக 427 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆடை ஏற்றுமதி ஊடான வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது ஐந்து மடங்கு அதிகரிப்பாக கணிக்கப்படுகின்றது.

Related posts: