நாட்டின் அசாதாரண நிலைமைக்காக பதவிவிலகப் போவதில்லை – ஜனாதிபதி!
Tuesday, May 7th, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம்.
மேலும் இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றபோது அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவிவிலகியதில்லை.
ஆகையால் தானும், இந்த தாக்குதல் சம்பவங்களை பொறுப்பேற்று பதவிவிலக போவதில்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
கொழும்பில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை!
சீனா எச்சரிக்கை - தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் - அமெரிக்கா – சீனா இடையேயான...
சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக...
|
|
|


