நாடு திரும்பினார் பசில் ராஜபக்ச – மீண்டும் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்!

Saturday, January 1st, 2022

விடுமுறைக்காக அமெரிக்கா சென்று இன்றையதினம் நாடு திரும்பியுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் முதலாம் திகதி பசில் ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts:


கிரவல்மண் குவிப்பு: பயணிக்க முடியாதவாறு இடையூறு செப்பனிட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
இலங்கை ஒருமித்த  நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை...
உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் - பௌத்த ஆலோசனை சபை தெரி...