நாடுமுழுவதும் இன்றுமுதல் தபால்மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Tuesday, June 30th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம் தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பிற்காக 7 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம் 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14, 15, 16, 17 மற்றும் 20, 21ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி அமர்வுகள் சிறப்பாக இடம்பெற சகல வசதிகளுடன் கூடியதாக மண்டபங்களைச் சீராக்கவும் - சபைகளின் ச...
சிறுப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மேலுமொருவர் படுகாயம்!
யாழ்.மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிப்பு!
|
|
|


