உள்ளூராட்சி அமர்வுகள் சிறப்பாக இடம்பெற சகல வசதிகளுடன் கூடியதாக மண்டபங்களைச் சீராக்கவும் – சபைகளின் செயலர்களுக்கு அறிவுறுத்தல்!

Tuesday, February 20th, 2018

புதிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சகல வசதிகளுடனும் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கான சபா மண்டபங்களை முறையாக அமைத்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா குறித்த அறிவித்தலை நாடு முழுவதும் உள்ள மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான செயலாளர்களுக்கும் ஆணையாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, நாடு முழுவதும் வட்டார அடிப்படையில் உள்ளூட்சி சபைத் தேர்தல் இடம்பெற்றது. ஒவ்வொரு உள்ளுராட்சிசபைக்கும் 25 வீதமான பெண் உறுப்பினர்கள் உட்பட அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் உருவாகியுள்ளன.

நாடு முழுவதும் 335 உள்ளூராட்சி சபைகளிலும் மார்ச் 6 ஆம் திகதி தொடக்கம் அமர்வுகள் ஆரம்பமாகும். அதன்போது தவிசாளர், உப தவிசாளர்களுக்கான பிரத்தியேக சபா மண்டபம், வெளிச்ச வசதி, காற்றோட்ட வசதி, ஓய்வு அறை, தவிசாளர், உப தவிசாளர்களுக்கான தொலைபேசி வசதி மற்றும் தேவைப்படும் வசதிகளை ஆணையாளர்கள், செயலாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கான சபா மண்;டபம் போதுமானதாக இல்லாவிட்டால் அதனை மாற்றீடு செய்து வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளான உறுப்பினர்கள் இருப்பின் அவர்களின் இருப்புக்கு ஏற்ற வகையில் சபைகளில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றுள்ளது.

Related posts: