கடல் தொழில் அபிவிருத்திக்கு ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு !

Thursday, December 7th, 2017

2018 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிலுள்ள மீனவர்களின் நன்மை கருதி ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கந்தர வெலிமங்கட மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 20 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய படகுகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கடற்றொழில் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: