நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் – விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்!
Monday, December 6th, 2021
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கைகலப்பு குறித்து விசாரிக்க விசேட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
அத்துடன் கௌரவத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய சிரேஷ்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
அதற்கு அனைவரும் ஒத்துழைத்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேட்டுக்கொண்டார்.
Related posts:
சீரற்றகால நிலையால் தேசியவருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகபொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை நிறைவு!
தொடரும் கனமழை - கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!
|
|
|


