நாடாளுமன்ற, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!

Thursday, January 12th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைணை 225இல் இருந்து 240ஆக உயர்த்த வேண்டும் என்று எல்லை நிர்ணய ஆணைக்குழு அரசுக்குப் பரிந்தரை செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்துச் சர்ச்சைகள் எழுந்திருக்கும் வேளையில் இந்தப் பரிந்துரை அறிக்கை வெளியாகி உள்ளது என்று நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு உரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4ஆயிரத்து 250இல் இருந்து 8ஆயிரத்து 500ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் எல்லை நிர்ணக்குழு பரிந்துரைத்துள்ளது.

கலாநிதி அசோகா பீரிஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரசிங்கவிடமும் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்களுக்கும் கையளிக்கப்பட்டது.

1560321059Untitled-1

Related posts: