கண்டிய நடனம் புகுத்தியமையே மோதலுக்கு காரணம்!

Friday, July 22nd, 2016

யாழ்.பல்கலைகழகத்தில் வழமைக்கு மாறான நடைமுறை மேற்கொள்ளப்பட்டதே மாணவர்களுக்கு இடையிலான மோதலுக்கு காரணம் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிப்பின் இந்த மோதல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு பல்கலைகழக உபவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த அறிக்கை இன்னும் 10 நாட்களுக்குள் தயாராகும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கிமைக்கு நன்றி. யாழ்ப்பாண பல்கலைகழத்திற்கு விஜயம் செய்து பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடுமாறு எனக்கும் அனர்த்த முகாமைத்து அமைச்சருக்கும் கௌரவ பரவிதானவிற்கும் பிரதமர் பணித்திருந்தார்.

மாணவ தலைவர்கள், விரிவுரையாளர்கள், செனட் மற்றும் பீடங்களின் பீடாதிபதிகளுடன் நாங்கள் மிக நீண்டகலந்துரையாடலொன்றை நடத்தினோம்.அனைவரும் பொதுவான அறையொன்றில் ஒன்றுகூடி, அவர்களின் கருத்துக்களை தெளிவாக முன்வைத்தார்கள்.எந்தவொரு சமூகத்துடனும் எந்தவொரு பகையுணர்வும் இல்லை என்பதை சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் மிகவும் தெளிவாக கூறினார்கள்.

சிங்களவர்கள் தமிழர்களுடன் நெருக்கமாக வசிக்கின்றனர். தமிழர்கள் சிங்களவர்களுடன் மிகவும் நெருக்கமாக வசிக்கின்றனர்.அநேகமான சிங்கள மாணவர்கள், தமிழ் மக்களின் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். அதனால் இதுவரை எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை.

பல்கலைகழகத்தில் முன்னர் பாரம்பரிய நடைமுறையொன்று பின்பற்றப்பட்டிருந்தது. தீடீரென அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக அந்த நடைமுறை மாற்றம் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் செய்யப்படவில்லை. பரஸ்பர இணக்கப்பாட்டுடன் செய்யப்பட்டிருப்பின் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்காது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைகழக துணைவேந்தர் மேற்கொண்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கை அநேகமாக இன்னும் 10 நாட்களில் கிடைக்கும்.அந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் சரியான விடயங்களை அறிய முடியும்.

இதன்பின்னர் மக்களின் கரிசனைக்குள்ளான விடயங்கள் குறித்து பல்கலைகழக செனட் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன தேவையான நடவடிக்கையை எடுக்கும்.எவ்வாறாயினும் இந்த நிலைமைகளை மேலும் மோசமாக்கும் விதமாக சிலர் செயற்படுகின்றமை மிகவும் துரதிஷ்டவசமானது.  எவ்வாறாயினும் யாழ்ப்பாண பல்கலைகழகத்திலுள்ள சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக இருக்கின்றனர் என்பதே உண்மையான விடயம் என தேரிவித்துள்ளார்.

Related posts: