நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தினார் – இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சுட்டிக்காட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்க காலத்தில் கரிம கழிவுகளை கொண்டு வந்து முழு நாட்டையும் முதன் முதலில் அழித்தவர் ரதன தேரர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருந்த அந்த சக்திவாய்ந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு உரக் கொள்கை ஒரு தீர்க்கமான விளைவைக் கொடுத்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, ரதன தேரருக்கு தெரியாத கஞ்சா தோட்டம் குறித்து பேச வேண்டாம் என தாம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!
பாதிப்புகளில் இருந்து மீளுவதற்கு கைகொக்கத் தயாராகும் வெளியுறவு அமைச்சு !
புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர...
|
|