கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவை ஒரு பொருட்டாக கருதவில்லை

Wednesday, September 11th, 2019

இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பாராளுமன்றம் மற்றும் கோப் குழு ஆகியவற்றை மதிக்காமல் கோப் குழுவில் சாட்சியம் அளித்தாக முன்னாள் கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால குற்றம் சாட்டியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

பாராளுமன்ற கோப் குழுவுக்கு யாராவது வரவழைக்கப்பட்டால் அவர் ஒரு தெளிவான பதிலலை அளிக்க வேண்டும் ஆனால் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவை ஒரு பொருட்டாக கருதவில்லை என கூறினார்.

குறிப்பாக பாராளுமன்றத்தின் மதிப்பை புறக்கணித்ததாகவும், மிகவும் தெளிவற்ற பதில்களை வழங்கியதாகவும் அவர் கூறினார். எனவே அத்தகைய நபர்களால் கிரிக்கெட் நிறுவனத்தை சமாளிக்க முடியுமா என்பது குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

இங்கு கிரிக்கெட் எயிட் நிறுவனத்தை கணக்காய்வாளரின் தணிக்கைக்கு உட்படுத்த மூன்றரை ஆண்டு தாமதம் ஏற்படுவது குறித்து வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் அனைவரும் கிரிக்கெட் எயீட் நிறுவன உதவி அதிகாரிகளாக மாறி வருவதாகவும், கடந்த 2005 க்குப் பிறகு இந்த நிலைமையை மாற்ற முயற்சித்ததாகவும் கூறினார்.

கிரிக்கெட் எயீட்க்கு நேரடியாக எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்றும், வருவாய் அனைத்தும் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்தே வழங்கப்பட்டதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகார குழுவின் அங்கத்துவ பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிக தடை விதிக்க விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய இதுகுறித்த கடிதத்தை விளையாட்டு துறை அமைச்சர் கிரிக்கெட் நிறுவனத்துக்கு  அனுப்பியுள்ளார் விளையாட்டு சட்டமூலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே  அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

திலங்க சுமதிபால கிரிக்கெட் நிர்வாகத்தில் மீண்டும் இணைய முடியுமா? என்பதைக் ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க, விளையாட்டு துறை பணிப்பாளர் ஜெனரல் தம்மிக முத்துகல தலைமையிலான மூவர் அடங்கிய குழுவையும் விளையாட்டு துறை அமைச்சர் நியமித்துள்ளார்.

Related posts: