நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு புதன்கிழமை கூடவுள்ளது!

Sunday, April 25th, 2021

நாடாளுமன்றத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட குழு எதிர்வரும் புதன்கிழமை முதன்முறையாக கூடவுள்ளது.

அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் அன்றையதினம் பிற்பகலில் குறித்த விசேட குழு கூடவுள்ளது.

இந்நிலையில் அன்றையதினம் பூரண விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து அதனை ஆராய்வதற்காக சபாநாயகரினால் குறித்த விசேட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அதன் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர் சமல் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல்ல, ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, அனுர பிரியதர்சன யாப்பா, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், எம். ஏ சுமந்திரன் ஆகியோர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: