நாடாளுமன்றில் இடைக்கால கணக்கு அறிக்கை நிறைவேற்றம்!
Saturday, December 22nd, 2018
எதிர்வரும் 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை 102 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட குறித்த கணக்கறிக்கைக்கு எதிராக 06 வாக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியானது குறித்த இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்களிப்பில் இருந்து தவிர்ந்தும் இருந்தனர்.
இதனிடையே நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி மதியம் 01.00 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
Related posts:
மீண்டும் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
ரயில் நிலையங்கள் தனியார் துறையினருடன் இணைவு!
வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து!
|
|
|


