நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தவாரம்!
Wednesday, June 30th, 2021
நாடாளுமன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதலின் 2 ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்றில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழு நேற்று ஒன்று கூடியது.
இதன்போது குறித்த விசாரணை அறிக்கையை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தென்னாசிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம் -பிரதமர்
இலங்கைக்கு இந்தோனேஷியா உதவி!
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை!
|
|
|


