நாடாளுமன்றம் செல்லாது நீதிமன்றம் செல்லும் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

Wednesday, December 12th, 2018

இலங்கை அரசியலில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளது அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்விவிராந்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த மனுவின் பிரகாரம் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடை நீதிமன்றால் விதிக்கப்பட்டிருந்தது

இன்றைய விசாரணையின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களும் முன்னிலையாக வேண்டும் என்று நிதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று மேல் நீதிமன்றத் நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோரால் விசாரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் 1.00 மணிக்கு நாடாளுமன்றம்  கூட்டப்படும் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து மஹிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நீதிமன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரசியல் சாசனம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – மஹிந்த அமரவீர!
அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்...
அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் - ராஜாங்க அமைச்சர்...